Lingashtakam in Tamil | Tamil Translation




லிங்காஷ்டகம் 

ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மலபாஸித  சோபித லிங்கம் |
ஜன்மஜ துஃக வினாசக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 1 ||

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 2 ||

ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர  வந்தித  லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 3 ||

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித  சோபித  லிங்கம் |
தக்ஷ ஸுயஜ்ஞ  விநாசன  லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதா சிவ லிங்கம் || 4 ||

குங்கும  சந்தன  லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம் |
ஸஞ்சித பாப வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 5 ||

தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவை-ர்பக்திபிரேவச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 6 ||

அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 7 ||

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 8 ||


தமிழாக்கம்

லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேத் சிவ ஸன்னிதௌ |
சிவலோகமவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||


ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா  சிவலிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எறித்த கருணாகர  லிங்கம்
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் .

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்
தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

தேவரின் உருவில் பூஜைக்கும்  லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமநாதனாய் பரவிடும்  லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்.

Comments